×
 

51 மாசத்துல 50 ஆயிரம் சேமிப்பு! விடியல் பயணம் மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடு... முதல்வர் பெருமிதம்

விடியல் பயணம் மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடு என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்

மகளிர் விடியல் பயணம் தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அணுகல் பற்றாக்குறை, சமூகப் பாகுபாடு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் மகளிருக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தொழில்முனைவோர் ஆகவும், சமூகத்தில் தலைமைப் பொறுப்புகளை ஏற்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், விடியல் பயணம் என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, பெண்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு உதவும் ஒரு முக்கிய திட்டமாகும். 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றவுடன் அறிவிக்கப்பட்ட ஐந்து முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டம் மே 8, 2021 முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் இது தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் மற்றும் திருநங்கைகளுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை வழங்குகிறது. 

இதையும் படிங்க: இதே வேலைதானா? சும்மா நோண்டாதீங்க! ஆளுநர் ரவிக்கு அன்பில் மகேஷ் வார்னிங்..!

இந்த திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன் என்ற எண்ணத்தை பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான, வேலைவாய்ப்புக்கான முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது விடியல் பயணம் என தெரிவித்தார்.

நமது திராவிட மாடலின் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளதும் அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என்று கூறினார்.

இதையும் படிங்க: கர்நாடகாவிலும் விரைவில் இரு மொழிக் கொள்கை... தமிழகத்தை தொடர்ந்து அதிரடி முடிவில் மாநிலங்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share