பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!
கிராமத்திற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி வீடுகளை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்தால் மட்டுமே நாங்கள் மறியிலிருந்து கை விடுவோம்
திருத்தணி அருகே கஞ்சா போதையில் 10-ஆம் வகுப்பு மாணவியை பின் தொடர்ந்து வந்ததோடு கிராமத்தில் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கிய இளைஞர்களை கண்டித்து சாலை மறியல்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது சவுக்குத் தோப்பில் மது போதையில் இருந்த வி.சி. ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மாணவியிடம் கிண்டல் செய்து பின் தொடர்ந்து கிராமத்தில் நுழைந்து பெண்களிடம்
கத்தியை காட்டிமிரட்டியுள்ளனர்.
மேலும் கிராமத்தில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து வீட்டின் ஜன்னல் மற்றும் மின்சாதன பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஆகியவற்றை அடித்து நொறுக்கி உள்ளனர். இதை கண்டித்து அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை அடித்துள்ளனர். இதை கண்டித்து அந்த ராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!
கிராமத்திற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி வீடுகளை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்தால் மட்டுமே நாங்கள் மறியிலிருந்து கை விடுவோம் என்று தொடர்ந்து மறியலில் ஈடுபட்டடனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதனை அடுத்து தகராறு செய்த பி சி ஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் அருண்குமார் விஜி உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!