×
 

பிளீஸ்..! மாற்று எரிசக்தியை பயன்படுத்துங்க... மத்திய அரசு வேண்டுகோள்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் மாற்று எரிசக்தியை பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், மக்களை மாற்று எரிசக்தி முறைகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நெருக்கடி மேற்கு ஆசியாவில் குறிப்பாக ஈரான்-இஸ்ரேல் மோதல் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் வழியாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டு, இந்தியாவின் எல்.பி.ஜி தேவையில் கணிசமான பங்கு தடைபடும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எல்.பி.ஜி இறக்குமதியாளராக இருப்பதால், இந்த சர்வதேச இடையூறு உடனடியாக உள்நாட்டு விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு சமையல் எரிவாயு கிடைப்பது முதன்மை என்றாலும், வணிக நிறுவனங்கள் உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவை மற்றும் சில தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதைச் சமாளிக்க மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை எடுத்தது. உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகரிக்க உத்தரவிட்டது, தொழில்துறைக்கான விநியோகத்தைக் குறைத்து வீட்டு நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்தது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுக்க அதிகாரிகளை ஈடுபடுத்தியது.

இதையும் படிங்க: 1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தி ஆயிரக்கணக்கான சிலிண்டர்களைப் பறிமுதல் செய்தது. இந்நிலையில், தட்டுப்பாட்டை நிர்வகிக்கும் வகையில் மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 88.80 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார அடுப்பு, இண்டக்ஷன் ஸ்டவ் உள்ளிட்ட மாற்று எரிசக்தியை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share