விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?
கடந்த மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் 29.50 காசுகள் உயர்ந்தப்பட்டது, மீண்டும் ஏழாம் தேதி 114.50 காசுகளும் உயர்த்தப்பட்டது.
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை. தற்போது 19 கிலோ வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 203 உயர்ந்து 2,269ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் 29.50 காசுகள் உயர்ந்தப்பட்டது, மீண்டும் ஏழாம் தேதி 114.50 காசுகளும் உயர்த்தப்பட்டது. குறிப்பாக கடந்த மாதம் ஒன்றாம் தேதி வணிக சிலிண்டர் உயர்த்தப்பட்டது. குறுகிய காலத்திலே அதே மாதம் ஏழாம் தேதி வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் 3வது முறையாக வணிக சிலிண்டர் உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர் ரூ.6500 வரை விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!