ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போகப் போறீங்களா? - கோவை மக்களை எச்சரித்த காவல்துறை...!
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொறுத்தி அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொறுத்தி அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருவோரின் குழந்தைகள் மற்றும் பணிக்கு வரும் காவலர்களின் குழந்தைகள் விளையாட ஏதுவாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் சிறிய பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவினை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும் போது : ஆணையர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணிக்கு வரும் காவலர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக இந்த பூங்கா பயன்படுத்தப்பட உள்ளது என்றார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேம்பாலத்தின் பெயரில் குழப்பம்: ‘அண்ணா’வா? ஜி.டி.நாயுடுவா..? முதலமைச்சர் நிகழ்ச்சி நிரலில் கோளாறு..!!
பழைய குற்றவாளிகள் கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல் பழைய அவிநாசி மேம்பாலம் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய சிக்னல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சிக்னல் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் ஜிடி நாயுடு மேம்பாலம் இறங்கும் கோல்டு வின்ஸ் பகுதியிலும் சிக்னல் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மேம்பாலத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்த உள்ளோம்.
இதன் மூலம் வாகனம் மேம்பாலத்தில் ஏறும் நேரம் பதிவு செய்யப்படுகிறது, அதே போல் இறங்கும் நேரமும் பதிவு செய்யப்படுவதால் என்ன வேகத்தில் வாகனம் மேம்பாலத்தில் இயக்கப்படுகிறது என்பதை கண்டறிந்து வேகமாக வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளோம். மேலும் மேம்பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனம் இயக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: பெருமைமிகு அடையாளம்... ஜி.டி. நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...!