×
 

#BREAKING கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கோர விபத்து; லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - இளம் பெண் உட்பட மூவர் பலி...!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், லாரி மீது மோதி விபத்து. - பெண் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், லாரி மீது மோதி விபத்து. - பெண் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ. நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலமாக பயண நேரம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் பாராட்டி வரும் நிலையில், அந்த பாலத்தை பார்வையிட வேண்டும் என்பதற்காகவே ஏராளமானோர் வாகனங்களில் சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது. 

கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்புலிபாளையத்தில் இருந்து  கோல்டுவின்ஸ் வரை உள்ள சுமார் 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கான மேம்பாலம், வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.  இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் உப்புலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி அதி வேகமாக சென்ற கார் ஒன்று பாலத்தில் இருந்து இறங்கிய போது,   கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த ஈச்சர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இளம் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கார் முழுமையாக லாரியின் அடியே சிக்கியதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கோவை பீளமேடு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர் பொக்லின் இயந்திரம் மூலம் காரை வெளியே எடுத்தனர்.

தொடர்ந்து காரில் சிக்கி இருந்த மூன்று பேரின் உடலை சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே எடுத்தனர். மீட்கப்பட்ட மூன்று பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் பயணித்தவர்கள் யார்?  எங்கிருந்து வந்தார்கள்?  என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் புதிதாக திறக்கப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை பயன்படுத்த போலீசார் தடை விதித்து கட்டுப்பாடு போட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் மேம்பாலத்தை திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொஞ்ச நேரத்துல வெடிக்க போகுது! தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share