#BREAKING: பாலியல் குற்றவாளி கெபிராஜுக்கு 10 வருடம் ஜெயில்.. மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
பாலியல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கராத்தே மாஸ்டர் கெபிராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டது. முதலில் ஒரு மாணவி அளித்த புகாரின் ஜாமினில் வெளிவந்த அவர் மீது பலமானதுகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தீவிரமடைந்தது.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பயிற்சி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி.. பாலியல் குற்றச்சாட்டை உறுதி செய்த மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
2021 ஆம் ஆண்டில் அளித்த புகாரின் பேரில் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜ் ஜாமினில் வெளிவந்தார். இதை எடுத்து மேலும் சில மாணவிகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்திருந்தனர்.
இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி பத்மா, இந்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
நேற்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றவாளி கெபிராஜ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி.. பாலியல் குற்றச்சாட்டை உறுதி செய்த மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!