“ஒடுக்க...ஒடுக்க... நீர்க்குமிழி போல்...” - தவெக அரசுக்கு சவால் விட்ட திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவான்...!
காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் இருந்து திமுகவினரை அப்புறப்படுத்தும் பணிகள் ஈடுபட்ட இதுதான் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக இன்று காலை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 5:30 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
திகழும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப் கருணாநிதி உள்ளிட்டோரை மாவட்ட காவல்துறையினர் அவரை சந்திக்க விடாமல் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் இருந்து திமுகவினரை அப்புறப்படுத்தும் பணிகள் ஈடுபட்ட இதுதான் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், எம்எல்ஏவை பார்க்கவிடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கையில் ஒரு தொலைபேசி கூட வைத்திருக்க அனுமதி இல்லை.
இதையும் படிங்க: "அடக்குமுறை"..! மார்க்கண்டேயனை வழக்கறிஞர் கூட சந்திக்க அனுமதி மறுப்பு.. கீதாஜீவன் கண்டனம்.!
மேலும் அவருடைய உதவியாளரை பார்க்க அனுமதிக்கவில்லை. வழக்கறிஞரை பார்க்க அனுமதிக்க வில்லை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க இதுவரை அனுமதிக்கவில்லை. அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. அவருக்கு உடல் நிலையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. முதுகு வலி உள்ளது. போலீஸ் அராஜகம். மேலே இருந்து உத்தரவு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே கேட்டால் தெரிகிறது. இங்கே உள்ள யாருமே முடிவெடுக்க முடியவில்லை.
சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித நோட்டீஸும் வழங்காமல் எவ்வாறு கைது பண்ண முடியும்?. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்க்கவும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். போலீஸ் கட்டுக்கடங்காத அளவுக்கு அராஜகம் மற்றும் அடக்கு முறையை தவிர்த்து விட்டு விடுகிறார்கள். எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம். எங்களுடைய தலைவர் சட்டமன்ற உறுப்பினரை பார்த்து விட்டு வர சொன்னார். ஆனால் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள். என்ன நிலைமையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
சட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள் தமிழக வெற்றிகழக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரிக்க கூட இல்லை. இந்த அளவுக்கு ஒடுக்குமுறை அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது தமிழக வெற்றி கழக அரசு.
நேற்று மாதா கோவில் பொருட்காட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அராஜகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை பழனி கோயில் பட்டா போட்டவர்கள் மீதும் இதுவரை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எந்த அளவிற்கு இவர்கள் அடக்கு முறையை கையாளுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். கீதா ஜீவன் பேட்டி
இதையும் படிங்க: கட்டை காலில் நின்னுட்டு என்ன பேச்சு... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்...!