×
 
☰

வெடிக்கும் ஜெம் வீரமணி வழக்கு.! தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் தள்ளுபடி.! முக்கிய உத்தரவு.!!

வீரமணி வழக்கில் தொழிலதிபர் பிரகாஷின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னையை மையமாகக் கொண்ட ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தை உலுக்கியுள்ளது. சிறுமிகளுக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. வீரமணி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை மூடிமறைக்க முயன்றதாகக் கூறப்படும் பணப்பரிமாற்ற விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தப் பின்னணியில் தொழிலதிபர் பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது முன்ஜாமீன் மனு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையைச் சேர்ந்த ஒரு குழந்தைகள் நல ஆர்வலர், மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்தார். அதில், வீரமணி சிறுமியுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காட்டும் வீடியோ அடங்கிய பென்டிரைவ் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை தொடங்கிய போதிலும், ஆரம்பத்தில் வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி மற்றும் சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் ஒரு உதவியாளரும் கைது செய்யப்பட்டார். பல சிறுமிகள் மீதான வன்கொடுமை புகார்கள் வந்துள்ள நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

விசாரணையில், வீரமணி தனது சொத்துக்களை விற்று பெரும் தொகையை திரட்டியதாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்து புகாரை முடிக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளிவந்தன. சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணப்பரிமாற்றத்திற்கு உதவியதாகவும், சொத்து விற்பனையில் ஈடுபட்டு பெரும் தொகை பெற்றதாகவும் தொழிலதிபர் பிரகாஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பிரகாஷ், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் கண்ணையாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்பியபோது அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!

இதையடுத்து அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சிய பிரகாஷ், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி பத்மா முன் விசாரணைக்கு வந்த இந்த மனுவில், பிரகாஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், வீரமணியுடனான பணப்பரிவர்த்தனைகள் தொழில் ரீதியானவை மட்டுமே என்றும் வாதிட்டார். காவல்துறை தரப்பில் பதிலளிக்க நேரம் கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது. பின்னர் இந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share