×
 
☰

ஜெம் வீரமணி விவகாரம்... புகார் அளிக்க SIT அழைப்பு..! Whatsapp எண்கள் அறிமுகம்..!

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக புகார் அளிக்கவோ அல்லது தகவல்கள் தெரிவிக்கவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபரும் ஜெம் குழுமத் தலைவருமான 84 வயதான ஆர். வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து பெற்ற பென்டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

அதில் உள்ள காணொளியில் வயதான நபர் ஒருவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. பின்னர் விசாரணையில் அந்த நபர் வீரமணி என்பது உறுதியானது. சம்பவம் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை வீரமணியின் உதவியாளராகச் செயல்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் பராமரித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், சில மாதங்களுக்குப் பிறகு காவல்துறை வழக்கை முடிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

ஆனால் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் 29 அன்று வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய கணேசன் என்பவரும் தனது கைபேசியில் தொடர்புடைய காணொளியை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுவரை பல பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததாகத் தெரிகிறது. பணம், மொபைல் போன், சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்து அவர்களை ஏமாற்றி அழைத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு உள்ளது. சிலர் கல்வி உதவி என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கொடூர பாலியல் வழக்கு... ஜெம் வீரமணி விவகாரத்தை விசாரிக்கும் SIT குழு விரிவாக்கம்..!!

வழக்கு பல ஆண்டுகளாகத் தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.விசாரணையை விரிவுபடுத்தும் நோக்கில் தமிழக காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பெண் அதிகாரிகள் முக்கியப் பொறுப்பில் உள்ளனர். சென்னை காவல் ஆணையர் மேற்பார்வையில் குழு செயல்பட்டு வருகிறது. மேலும் அதிகாரிகள் சேர்க்கப்பட்டு குழு விரிவாக்கம் செய்யப்பட்டது. வீரமணியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளிகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சமீபத்தில் கூடுதல் புகார்கள் வந்துள்ளன.

ஒரு தாய் தனது மகள் கல்வி உதவி பெறும் போது பாதிக்கப்பட்டு பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும் சிலர் குழுவிடம் நேரடியாகத் தகவல் அளித்துள்ளனர்.இந்த சூழலில் சிறப்புப் புலனாய்வுக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜெம் வீரமணி வழக்கில் புகார் அல்லது கூடுதல் தகவல்கள் தெரிந்தால் 9345319676 என்ற எண்ணுக்கு நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் புகார்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: 26 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த புகார்... ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு...! புதிய சிக்கல்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share