×
 
☰

மாயமான செஞ்சி சிறுமி விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்... ஆடு மேய்க்கும் நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

சிறுமி காணாமல் போன வழக்கில் இன்றோடு 24 நாட்கள் ஆன நிலையில் சிறுமியின் வீட்டருகே வசிப்பவர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை. 

செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில்,14-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் தொடர்பில் இருந்த ஆடு மேய்க்கும் இளைஞரான அரவிந்த் என்பவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை. ஆலம்பூண்டி வனப்பகுதியை நோக்கி விசாரணை கோணத்தை திருப்பும் சிபிசிஐடி போலீசார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் இன்றோடு 24 நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை குறித்து எவ்வித தடயமும் தகவலும் கிடைக்கவில்லை.

ஏற்கனவே இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட காவல்துறை 10 நாட்கள் விசாரணை செய்த நிலையில் வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததால் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இந்த வழக்கு ஆனது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: செஞ்சி சிறுமிக்கு என்ன ஆச்சு?... காட்டுக்குள் சல்லடை போடும் போலீஸ்... லாரி டிரைவர்கள் பக்கம் திரும்பிய சந்தேகம்...!

இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி முதல் இன்று வரை 14 வது நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிறுமியின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையிலும் இன்று வரை சிறுமி குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

இதனிடையே சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் தொடர்பில் இருந்த ஆடு மேய்க்கும் இளைஞரான அரவிந்த் என்பவரிடம் இரண்டாவது நாளாக சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் சிறுமியின் வீட்டருகே வசிப்பவர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.சிபிசிஐடி போலீசாரின் விசாரணை கோணம் ஆலம்பூண்டி வனப்பகுதியை நோக்கி திரும்பி உள்ளது.

இதனிடையே நேற்று இந்த சிறுமி காணாமல் போன வழக்கு விசாரணையில் ஈடுபட்டு உள்ள சிபிசிஐடி டிஎஸ்பிகள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீசாருடன் உயர் அதிகாரிகள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 

இதையும் படிங்க: சமூக ஊடகங்களில் அவதூறு! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்! என் குழந்தையை மீட்டுக் கொடுத்தாலே போதும் என கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share