×
 
☰

செஞ்சி சிறுமி எங்கே.? இன்றோடு 19 நாள்.!! 600 பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து ஆய்வு..!!

செஞ்சியில் சிறுமி காணாமல் போய் 19 நாட்கள் ஆகும் நிலையில் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு மற்றும் அவரது மனைவி பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஏழு வயது மகள் உள்ளூர் அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 11 அன்று மாலை குடும்பத்தினருடன் தனது ஏழாவது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு தாயார் மற்றும் பாட்டியுடன் வீட்டில் தூங்கச் சென்றார்.

மறுநாள் அக்டோபர் 12 அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமி காணாமல் போயிருந்தார். வீட்டிற்குள் எந்தவித உடைப்பு அல்லது போராட்ட அறிகுறியும் இல்லாமல் அவர் மர்மமாக மறைந்தது குடும்பத்தினரையும் கிராமத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.முதலில் குடும்பத்தினர் வீட்டின் உள்ளேயும் சுற்றுப்புற வயல்வெளிகளிலும் கால்வாய் பகுதிகளிலும் தேடினர்.

பின்னர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...” - இனி எல்லாமே சி.எம். கண் முன்னாடி தான்... நகராட்சி பணிகளை கண்காணிக்க புதிய செயலி...!

ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள், தீயணைப்புப் படையினர் உதவியுடன் கிணறுகள், குட்டைகள், ஏரிகள், மலைப்பகுதிகள், புதர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் நடைபெற்றது. ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.சம்பவ நேரத்தில் அப்பகுதியில் பதிவான சுமார் அறுநூறு செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் செல்போன் கோபுரத் தகவல்கள் ஆய்வு செய்து வருகின்றனர் . 

இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கில் அதிரடி உத்தரவு.. வாக்காளரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share