சிறுமி எங்கே..? தொடரும் மர்மம்..! 6000 செல்போன் அழைப்புகள் ஆய்வு..! திணறும் போலீஸ்..!!
செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 9 வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் ஏழு வயது சிறுமி ஹேமாவதி காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளர்களான வடிவேலு-பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் காணாமல் போனார்.
தாயார் எழுந்து பார்த்தபோது மகள் இல்லை; வீட்டின் ஒரு கதவு திறந்திருந்தது. உடனடியாக சுற்றுவட்டாரத்தில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.காவல்துறை வழக்குப் பதிவு செய்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினார். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் களமிறக்கப்பட்டனர்.
பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மோப்ப நாய்கள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தேடல் நடைபெற்றது. வீடுகள், விவசாய நிலங்கள், கரும்புத் தோட்டங்கள், நீர்நிலைகள், மலைப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சிறுமி மாயமான நேரத்தில் அப்பகுதியில் இயங்கிய செல்போன் கோபுரங்களில் பதிவான நூற்றுக்கணக்கான அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. கண்காணிப்பு கேமரா பதிவுகளும் சரிபார்க்கப்பட்டன.கிராமத்தினர் மற்றும் வெளியூரிலிருந்து வந்தவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING ‘மெத்’ பூபாலன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... தவெக நிர்வாகியின் கூட்டாளிக்கு குறி... மத்திய வருவாய் புலனாய்வு போலீஸ் அதிரடி..!
சிறுமியின் வீட்டருகே உள்ள கோவிலில் தங்கியிருந்த ஒரு சாமியார் மீது சந்தேகம் எழுந்ததால் அவர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். குற்றச் சரித்திரம் உள்ளவர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. இருப்பினும் இதுவரை உறுதியான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.தேடுதல் பணி ஒன்பதாவது நாளாகத் தொடர்கிறது. காவல்துறை அதிகாரிகள் தனிப்படைகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பெற்றோர் கதறி அழுது கொண்டிருக்க, கிராம மக்கள் சிறுமி விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த மர்மம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: 150 நாட்கள் வேலைவாய்ப்பு..? யார் யாருக்கு முன்னுரிமை..? முக்கிய அறிவிப்பு.!