×
 
☰

செஞ்சி சிறுமி மாயம்...15 நாள் மர்மத்தில் திடீர் திருப்பம்... விசாரணை கோணத்தையே டோட்டலாக மாற்றிய சிபிசிஐடி...!

சிறுமி ஹேமலதா, மறுநாள் காலையில் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கடந்த ஐந்து நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 11ஆம் தேதி இரவு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய சிறுமி ஹேமலதா, மறுநாள் காலையில் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கடந்த ஐந்து நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சிறுமியின் தாயாரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரிடமும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சிறுமி குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம், குறிப்பாக ரயில் மூலம் வடமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே?... தாயிடம் டஜன் கணக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள்... சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த திடுக் தகவல்கள்...!

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் ரயில் நிலையம், வெங்கண்டியவனம் ரயில் நிலையம், புதுச்சேரி மாநிலம் மற்றும் திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம், சிறுமி கடத்தப்பட்டாரா, அவர் வடமாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு நபர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், சிறுமி தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் ஏதேனும் சிறிய தடயமாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சிறுமி வழக்கமாகச் செல்லும் இடங்கள் குறித்து அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி, சிறுமி தொடர்பான முழுமையான விவரங்களைப் பெற்றுக்கொண்டு, அந்த இடங்களில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், ஆலங்குடி கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிகளிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதா?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு எஸ்.பி. கொடுத்த பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share