×
 

வரதட்சணை கொடுமை! திருமணமான 8 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்...

திருமணமான 8 மாதத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான பெண்களிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் சம்பவங்கள்  நிகழ்ந்து வருகின்றன. காலம் மாறினாலும் காட்சி மாறுவதில்லை என்பதை போல வரதட்சணை பிரச்சனையும் மாறாமல் இருக்கிறது. அதிலும் வரதட்சணை கொடுமையால் மனம் உடைந்து பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் மனதை உலுக்குகின்றன.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணம் ஆன 8 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் மனமடைந்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன்- சாந்தி ஆகியோரின் இளைய மகள் ரோகினி. இவர் ராகம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகநாதனை ரோகினி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லோகநாதன் மற்றும் அவரது பெற்றோர் ரோகினி பெற்றோரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ரோகினி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ரோகினியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோகினியின் கணவர் மற்றும் கணவனின் பெற்றோர் உள்ளிட்டோரை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடினர். 

இதையும் படிங்க: விண்ணை பிளந்த ஓம் நமச்சிவாய.. ஆடி பௌர்ணமி.. திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள்..!!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: பக்தர்களே ரெடியா..?? அண்ணாமலையார் கோவிலில் வரப்போகுது 2 சூப்பரான விஷயம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share