×
 

பாமகவிலிருந்து G.K. மணி நீக்கம்... அவதூறு பரப்பியதாக அன்புமணி அதிரடி நடவடிக்கை...!

பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

1984ஆம் ஆண்டில், பாமக கட்சி உருவாவதற்கு முன்பே, வன்னியர் சங்கத்தின் சார்பில் கொளத்தூர் யூனியன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு G.K. மணி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1989ஆம் ஆண்டு டாக்டர் எஸ். ராமதாஸால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் முக்கியப் பங்காற்றினார். 1997 முதல் 2022 வரை கட்சியின் தலைவராகவும், பின்னர் கௌரவத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

இந்த 25 ஆண்டுகாலப் பொறுப்பில், வன்னியர் சமூகத்தின் உரிமைகள், குறிப்பாக இடஒதுக்கீடு போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தார்.தேர்தல் அரசியலில், பென்னாகரம் தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றவர். 1996, 2001, 2021 ஆகிய ஆண்டுகளில் பென்னாகரம் தொகுதியிலும், 2006ஆம் ஆண்டு மேட்டூர் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பாமகவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் செயல்படுகிறார்.

பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு நெருக்கமானவராகவும், கட்சியின் உள் அமைப்பை வலுப்படுத்தியவராகவும் அறியப்படுகிறார். கட்சியின் கூட்டணி அரசியலில் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் பங்காற்றியுள்ளார். இருப்பினும், 2022இல் அன்புமணி ராமதாஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல்களில் ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாக நின்றார். 

இதையும் படிங்க: ராமதாஸ் போன்ற தலைவரை கொச்சைப்படுத்தலாமா? கொந்தளித்த ஜி.கே. மணி…!

இந்த நிலையில், பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஜி.கே. மணி நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 18ஆம் தேதி ஜிகே மணிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். கால அவகாசம் வழங்கியும் விளக்கம் அளிக்காததால் ஜி.கே. மணி நீக்கப்பட்டிருப்பதாக அன்புமணி அறிவித்துள்ளார். பாமக கௌரவ தலைவராக இருந்து வரும் ஜி.கே. மணி ராமதாஸ் ஆதரவாளராக இருந்து வரும் நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... விரைவில் கூட்டணியை அறிவிக்கும் ராமதாஸ்... ஜி.கே.மணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share