×
 

மோசடி பண்ணிருக்காங்க... அன்புமணி பாமக தலைவர் கிடையாது! ஜி.கே மணி திட்டவட்டம்

பாமகவின் தலைவர் அன்புமணி கிடையாது என ஜி.கே மணி திட்டவட்டமாக தெரிவித்தார்.

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் மூலம் சமீப காலங்களில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது என கூறினார். பாமகவின் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.

அதன்படி, 2026 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அன்புமணியை பாமக தலைவராக நீட்டித்து தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக கூறினார். அன்புமணிக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாது அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும் என்றும் பாமக நிர்வாகிகளின் பதவி காலத்தையும் நீட்டித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். 

ராமதாஸ் தரப்பில் எந்தவித கருத்தும் கூறப்படாமல் இருந்த நிலையில் ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாமகவின் தலைவர் பதவியில் அன்புமணி தற்போது கிடையாது எனக் கூறினார். மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் 2025 மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு! அதிமுகவுடன் இணைந்து அனல் பிரச்சாரம்... அண்ணாமலை அறிவிப்பு

ராமதாசுக்கு தெரியாமல் கட்சி முகவரியை மாற்றி சூழ்ச்சி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். பாமகவின் நிர்வாக குழு கூடி ராமதாசை தலைவராக நியமித்துள்ளதாக தெரிவித்தார். பாமக நிறுவனர் இன் ஒப்புதல் இல்லாமல் நிறுவன குழு, செயற்குழு என எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பது விதி என்று கூறினார். 

இதையும் படிங்க: அப்படி ஒன்னும் வருத்தமில்ல! நயினார் நல்ல நண்பர்.. மனம் திறந்த டிடிவி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share