#BREAKING: 2026 தேர்தல்... தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு..!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த ஒதுக்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்துப் பேசிய பின்னர், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. முன்பு த.மா.கா.வுக்கு மூன்று தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் எனப் பேசப்பட்ட நிலையில், இறுதியில் அக்கட்சி கோரிய ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது கூட்டணியில் சுமுகமான முடிவை எட்டியதைக் காட்டுகிறது. இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகள் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் கும்பகோணம். இந்தத் தொகுதிகளில் த.மா.கா. வேட்பாளர்கள் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
த.மா.கா.வின் பாரம்பரிய சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டதால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு இணங்க தாமரைச் சின்னத்தை ஏற்றுக்கொண்டதாக ஜி.கே. வாசன் விளக்கினார். இந்த முடிவு, கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: “திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது...” - ஒரே போடாய் போட்ட ஜி.கே.வாசன்...!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியானது. முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார். ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ஈரோடு மேற்கு தொகுதியில் யுவராஜா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார். கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் அசோக் குமார், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நிவின் சைமன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!