×
 
☰

அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்: 2027 அரசு விடுமுறை பட்டியல் ரிலீஸ்!

2027ஆம் ஆண்டுக்கான 24 அரசு பொது விடுமுறை நாட்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

வரும் 2027-ஆம் ஆண்டிற்கான 24 அரசு பொது விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச் சட்டத்தின் (Negotiable Instruments Act, 1881) கீழ் இந்த அறிவிக்கையைத் தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, வழக்கமான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து பண்டிகைகள், தேசிய மற்றும் மாநில முக்கிய தினங்கள் என மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு (வெள்ளி), ஜனவரி 15 பொங்கல் (வெள்ளி), ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் (சனி), ஜனவரி 17 உழவர் திருநாள் (ஞாயிறு), ஜனவரி 22 தைப்பூசம் (வெள்ளி), ஜனவரி 26 குடியரசு தினம் (செவ்வாய்), மார்ச் 10 ரம்ஜான் (புதன்), மார்ச் 26 புனித வெள்ளி, ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் - வியாழன்), ஏப்ரல் 7 தெலுங்கு வருடப் பிறப்பு (புதன்), ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி (புதன்), ஏப்ரல் 19 மகாவீரர் ஜெயந்தி (திங்கள்), மே 1 மே தினம் (சனி), மே 17 பக்ரீத் (திங்கள்), ஜூன் 15 மொகரம் (செவ்வாய்), ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (ஞாயிறு), ஆகஸ்ட் 25 கிருஷ்ண ஜெயந்தி (புதன்), செப்டம்பர் 4 விநாயகர் சதுர்த்தி (சனி), அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி (சனி), அக்டோபர் 8 ஆயுத பூஜை (வெள்ளி), அக்டோபர் 9 விஜயதசமி (சனி), அக்டோபர் 28 தீபாவளி (வியாழன்) மற்றும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் (சனி) ஆகியவை பொது விடுமுறை நாட்களாகக் கடைப்பிடிக்கப்படும்.

இதையும் படிங்க: சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பிரமோஷன்..! அரசு ஊழியர்களுக்கு செக்... தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!

பொது விடுமுறை நாட்களில் உழவர் திருநாள் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரு நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகள் வார வேலைநாட்களிலும் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share