×
 

மாற்றுத்திறனாளிப் பெண்ணை சீரழித்த கொடூரர்கள்..!! பாய்ந்தது குண்டாஸ்..!!

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத இப்பெண், திருமணமாகாத நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார். அவர் ஆலங்குடி அருகே உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவருக்கு நேர்ந்த இந்தக் கொடூரம், சமூகத்தின் பாதுகாப்பின்மையை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. 

வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை காரில் ஏற்ற முயன்றனர். பெண் மறுத்தபோதும், அவர்கள் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிச் சென்றனர். அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். மயக்கமடைந்த நிலையில் அவரை கறம்பக்குடி - ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு தப்பியோடினர். 

உள்ளூர் மக்கள் அவரது அழுகைச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து அவரை மீட்டனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், முதலில் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்தின்போது அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்த முடியாத நிலையில் அழுதுகொண்டிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய சூலூர் கொடூரம்..! கைதாகிய 2 பேர் மீதும் பாய்ந்த குண்டாஸ்..!

காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிகளான மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (55) மற்றும் சேகர் (56) ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இரண்டு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

இதையும் படிங்க: மொழி TO மாநில உரிமை வரை..! கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்... புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share