×
 

"அலைபேசிக்கு தடை"... அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த உத்தரவு..! போக்குவரத்துக் கழகம் கறார்..!!

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக் கழகங்கள் பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டைப் பையில் கைப்பேசி வைத்திருக்கவும் தடை செய்யப்பட்டு, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக அரசு பேருந்துகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக ஓட்டுநர்களின் கவனச் சிதறல் சுட்டிக்காட்டப்படுகிறது.

பேருந்தை இயக்கும் போது மொபைல் போனில் பேசுவது, ரீல்ஸ் அல்லது வீடியோக்களை பார்ப்பது, செய்திகளை படிப்பது போன்ற செயல்கள் பொது மக்களிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்கள் மூலம் அடிக்கடி கண்டறியப்படுகின்றன. ஒரு பேருந்தில் சராசரியாக 40 முதல் 60 பயணிகள் பயணிக்கும் நிலையில், ஓட்டுநர் ஒரு நொடி கூட திசை திருப்பப்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 

இதையும் படிங்க: 4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஓட்டுநர்கள் பணிக்கு வரும் போது தங்கள் கைப்பேசிகளை தங்களுடன் பணியாற்றும் நடத்துனரிடம் ஒப்படைக்க வேண்டும். பணி முடிந்த பின்னரே அதை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். பணியின்போது ஓட்டுநர்கள் சட்டைப் பையிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ மொபைல் போனை வைத்திருக்க அனுமதி இல்லை. ப்ளூடூத் சாதனங்கள், ஹெட்செட் உள்ளிட்ட தொடர்புடைய சாதனங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: +2 தேர்வு முடிவுகள் வெளியீடு..! ஆளுநர் உத்தரவிட்டது ஏன்.? மக்கள் மாளிகை விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share