×
 

செவிலியர் செலுத்திய ஊசி... திடீரென 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வலிப்பு, மயக்கம்- விடிய, விடிய பரபரப்பு...!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சளி பல்வேறு உபாதைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பத்து குழந்தைகளுக்கு செவிலியர் ஊசி செலுத்தியதால் திடீரென வலிப்பு வாய்ந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் சளி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன.

குழந்தைகள் வார்டில் காய்ச்சல் சளி அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு இரவு ஒன்பது மணி அளவில் மருத்துவர்கள் சோதனை செய்து அவர்களுக்கு செவிலியர் சிகிச்சைக்காக ஊசி செலுத்தி உள்ளார். ஊசி செலுத்திய சிறிது நேரத்திலையே திடீரென எட்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, மயக்கம்,மற்றும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பத்து குழந்தைகள் விழுப்புரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலை. யில் 5 கோடி முறைகேடு! முதல்வர் சஸ்பெண்ட் ...

இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போதிய அளவு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலயர்களும் இல்லாததால் சிகிச்சை அளிபதில் தாமதம் ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: மோடிக்கு நன்றி சொன்ன ஜெலான்ஸ்கி!! இந்தியாவை நாங்க நம்புறோம்!! உருக்கமான பேச்சு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share