×
 
☰

தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

தற்பொழுது தமிழக சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளிலும் இந்தி திணிப்பு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மாநில நெடுஞ்சாலை ஹிந்தி, தமிழ் ஆங்கிலம் மூன்று மொழிகள் இடம்பெற்றது சர்ச்சையான நிலையில் தொடர்ந்து தற்போது அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ உரைகளிலும் இந்த தற்போது ஹிந்தி இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. 

குறிப்பாக கோவை கரூர் அரசு மருத்துவமனைகளில்  நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உரையில் தமிழ் ஆங்கிலம் ஏற்கனவே இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதாவது இன்றைய தினம் வழங்கப்பட்ட அந்த உரையில் தமிழ் ஆங்கிலத்துடன் தற்போது இந்தியும் இடம்பெற்றது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் இரு மொழியில் இருந்த விவரங்கள் மும்மொழிக்கு மாறியது ஏன் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாநில நெடுஞ்சாலையில் அதாவது நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகைகளில் ஹிந்தி மொழி இடம்பெற்றது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நாசரேட் மாநில நெடுஞ்சாலையில் இந்த வழிகாட்டிப் பலகை அதேபோன்று சென்னையில் உள்ள கோயம்பேட்டிலும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள நெடுஞ்சாலை துறையின் கீழ் வைக்கப்படும் வழிகாட்டு பலகைகளில் இந்தி இடம்பெற்றது பெரும் சர்ச்சையானது.

இதையும் படிங்க: நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரிகள் மீது தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து தற்பொழுது தமிழக சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளிலும் இந்தி திணிப்பு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதாவது தமிழ்நாட்டில் இதனால் வரை இரு மொழி கொள்கை இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ் ஆங்கிலம் மட்டுமே அந்த மருத்துவ உரைகளில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது கோவை, கரூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை கவரில் தமிழ் ஆங்கிலத்துடன் ஹிந்தியும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக இது குறித்து அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இதுநாள் வரை இருமொழி கொள்கை இருந்த நிலையில் தற்பொழுது மூன்றாவதாக அதாவது முன்மொழி கொள்கைக்கு மாறியது ஏன் என பல்வேறு கேள்விகளை அரசை நோக்கி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து சுகாதாரத்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குரல் வலுத்து வருகிறது. இ

இந்நிலையில் தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே இந்தி மொழியானது சர்ச்சையாகி வரும் நிலையில், ஏற்கனவே தவெக அரசின் சார்பில் இருமொழி கொள்கை தான் தொடரும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: உச்சநீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி: ஆணையம் அமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share