×
 

அரசு பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்... ஆசிரியை திட்டியதால் 3 மாணவிகள் எடுத்த விபரீத முடிவு..!

கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூன்று பேர் சாணி பவுடர் குறித்து தற்கொலை முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் 3 மாணவிகள் சாணிப்பவுடரைக் கரைத்து குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மூன்று பேர் இன்று மயக்முற்ற நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பள்ளியில் பயிலும் ஆசிரியை, பள்ளி மாணவிகளை திட்டியதாகவும்,அதனால் மனம் உடைந்து பள்ளி மாணவிகள் மூவர் சாணி பவுடர் குடித்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் இருக்க பயமேன்... டெல்லியை ஜெர்க்காக்கிய டிடிவி-யின் ‘டிசம்பர் பிளான்’...!

இது குறித்து அறிந்து பள்ளி ஆசிரியர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியோடு கஞ்சம்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பள்ளி மாணவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியதை எடுத்து மருத்துவமனைக்கு விரைந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: GST 2.O எதிரொலி... ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share