ஜெயில்ல இருந்து ஆட்சி பண்ணலாமா? மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு? அமித்ஷா ஆத்திரம்!!
சிறையில் இருந்தபடி, பிரதமரோ, முதல்-மந்திரிகளோ அல்லது மந்திரிகளோ அரசாங்கத்தை நடத்துவது சரியா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்யட்டும் என அமித்ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேத்து (ஆகஸ்ட் 20, 2025) ஒரு பரபரப்பு நாளா மாறிடுச்சு! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் மூணு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்தாரு. இதுல முக்கியமானது, பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் சிறையில் 30 நாளுக்கு மேல இருந்தா, 31-வது நாள் பதவி பறிக்கப்படும்னு சொல்லுற அரசியல் சாசன (130-வது திருத்தம்) மசோதா-2025.
மத்த மசோதாக்கள், யூனியன் பிரதேசங்கள் அரசு (திருத்தம்) மசோதா-2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா-2025. இந்த மசோதாக்கள், 5 வருஷ சிறை தண்டனைக்கு உள்ளாகுற குற்றங்களில் கைதாகி, 30 நாள் ஜெயிலில் இருக்குற பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க வழி செய்யுது.
இந்த மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் பெரிய அமளியை கிளப்பினாங்க. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, AIMIM தலைவர் அசாதுதின் ஒவைசி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சியின் பிரேம சந்திரன் உள்ளிட்டவங்க, “இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கும், கூட்டாட்சி கொள்கைக்கும் எதிரானது”ன்னு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
இதையும் படிங்க: ஜனநாயகத்தின் அடிவேரையே தாக்கும் மசோதாவை எதிர்க்கிறேன்.. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்..!!
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மசோதாவின் நகல்களை கையில் வச்சு கிழிச்சு, அமித்ஷா முன்னாடி தூக்கி எறிஞ்சு தங்கள் ஆத்திரத்தை காட்டினாங்க. இதனால, மக்களவையில் பெரிய பரபரப்பு உருவாச்சு. இந்த அமளிக்கு நடுவே, அமித்ஷா, “இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்ய அனுப்புறோம்”னு அறிவிச்சு, சமரசம் பண்ண முயற்சி செஞ்சாரு.
அமித்ஷா, தன்னோட X பக்கத்தில் ஒரு பதிவு போட்டு, “சிறையில இருந்து ஆட்சி பண்ணுறது சரியா? இதை நாட்டு மக்கள் தான் முடிவு செய்யணும்”னு கேள்வி எழுப்பியிருக்காரு. இதோடு, “பிரதமர் மோடி, அரசியல் நாணயத்தை மீட்டெடுக்க இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்காரு.
ஆனா, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், சட்டத்துக்கு மேல நின்னு, ஜெயில்ல இருந்து ஆட்சி செய்யவும், பதவி பிடியை விடாம இருக்கவும் இதை எதிர்க்குறாங்க”னு குற்றம்சாட்டியிருக்காரு. இதுக்கு முன்னாடி, காங்கிரஸ் தன்னை பொய் வழக்கில் சிக்க வச்சு கைது செஞ்சப்போ, தான் முன்கூட்டியே ராஜினாமா செய்ததை நினைவு படுத்தியிருக்காரு.
இந்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் அரசு சட்டம்-1963-ல 45-வது பிரிவில் திருத்தம் கொண்டு வருது. இதன்படி, கடுமையான குற்றங்களில் கைதாகி, 30 நாளுக்கு மேல சிறையில் இருக்குறவங்க பதவி தானாகவே பறிக்கப்படும். ஆனா, எதிர்க்கட்சிகள், “இது மத்திய அரசு மாநில அரசுகளை கட்டுப்படுத்தவும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும் உருவாக்கப்பட்ட திட்டமா இருக்குன்னு” சந்தேகப்படுறாங்க. இதனால, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஆய்வு செய்யப்பட்டு, இன்னும் விவாதிக்கப்பட வேண்டியிருக்கு.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருது. குறிப்பா, தமிழ்நாட்டில் தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, பொன்முடி மாதிரியான அமைச்சர்கள் முன்னாடி வழக்குகளில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்தவங்க. இவங்களுக்கு இந்த மசோதா பெரிய அடியாக இருக்கலாம்னு எதிர்க்கட்சிகள் கருதுறாங்க. இதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜியை, “ஜாமீனா, இல்லை அமைச்சர் பதவியா?”ன்னு கேள்வி எழுப்பியிருக்கு. இந்த மசோதா, அரசியல் களத்தில் புது சர்ச்சையை கிளப்பியிருக்கு.
இதையும் படிங்க: டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!