×
 

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிதித்துறை மசோதாக்கள்.. ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ரவி..!

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்குமான மோதல் போக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்த நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் மேலும் 14 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்..! முதலமைச்சர் முன்னிலையில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share