×
 

"யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

கடும் கோபமடைந்த அவர், தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் காவல் துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோட் ஆகியோரை அழைத்து கடுமையாக டோஸ் கொடுத்துள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இருபெரும் திராவிட இயக்கங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழக வெற்றிக் கழகம் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது. தற்போது காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தாலும், இன்னம் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெகவிற்கு தேவை. இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

இதனிடையே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த விஜய், தன்னிடம் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 112 பேரின் ஆதரவு இருப்பதாகவும், ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் கடிதம் வழங்கினார். ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சி அமைக்கும் படி விஜய்க்கு ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா, இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தமிழக அரசின் பொதுத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். ஆட்சி அமைப்பதற்கான சட்டப்பூர்வ நிகழ்வுகள் எதுவும் நடக்காத நிலையில், பொதுத்துறை இப்படி பதவியேற்பு விழா ஏற்பாடுகளில் மூழ்கியது, ஆளுநர் அர்லேக்கர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபரம் அறிந்து, கடும் கோபமடைந்த அவர், தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் காவல் துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோட் ஆகியோரை அழைத்து கடுமையாக டோஸ் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

'ஆட்சி அமைப்பது தொடர்பான எந்த சட்டப்பூர்வ நிகழ்வுகளும் நடக்காத நிலையில், யாரை கேட்டு இப்படியெல்லாம் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன? விழா நடத்த வேண்டும் என்றாலும், வழக்கமான நடைமுறையில், ஆளுநர் அலுவலக வளாகத்தில் தானே நடத்துவது வாடிக்கை. இம்முறை மட்டும் நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றியது ஏன்? உடனே, அனைத்து ஏற் பாடுகளையும் நிறுத்துங்கள்' என ஆளுநர் ஆவேசமாக உத்தரவிட, விழா ஏற் பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
அதேபோல, உளவுத்துறைக்கு இரு அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டது குறித்தும் ஆளுநர் டி.ஜி.பி.,யிடம் கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 118 எங்கே? எண்ணிக்கையை நிரூபித்த பின்னரே பதவியேற்க முடியும்!! கறார் காட்டும் கவர்னர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share