தமிழகத்தில் விசில் புரட்சி..! அனைத்தும் அனைவருக்கும்... சட்டசபையில் ஆளுநர் உரை..!!
தமிழகத்தில் விசில் புரட்சி நடைபெற்ற இருப்பதாக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார்.
"மக்களே ஜனநாயகத்தின் நாயகர்’’ என்ற பேரறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி, 1967-ல் அண்ணா, 1977-ல் MGR-க்கு பிறகு 2026-ல் வரலாற்று புரட்சி நடந்திருப்பதாக ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தி உள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்கள் பெயர்களை குறிப்பிட்டும் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றார். இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய் என்றும் குறிப்பிட்டுள்ளார். 1967, 1977-ல் அண்ணா, எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய புரட்சி போல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது; தமிழ்நாட்டின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளித்துள்ளது தவெக என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!
சட்டமன்றத்தில் மக்களுக்கான பிரச்சினைகளை விவாதிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தமிழக அரசியல் வரலாற்றில் ஆட்சியில் பங்கு என்பதை நிகழ்த்தி காட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஜனநாயகத்தில் பளபளத்தை தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை குறிப்பிட்டு தனது உரையை ஆளுநர் நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: அந்த கயிறு கண்ணை உறுத்துதோ.? இந்துக்கள் மீதான வெறுப்பு... தவெகவை விளாசிய வானதி சீனிவாசன்..!!