×
 

#BREAKING: திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

கோவை மேட்டுப்பாளையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்யப்பிரியா. இவர் மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர் தனது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி, பரமேஸ்வரி உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.

சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று மாலை காரில் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்த போது கல்லாறு முதல் வளைவு அருகே கார் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் திவ்யப்பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!

ஆனால் திவ்யப்பிரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

இதையும் படிங்க: கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share