×
 

பிரதமரின் தீபாவளி பரிசு... ஜிஎஸ்டி மாற்றம் விலை குறைப்பு அல்ல புரட்சி! நிர்மலா சீதாராமன் பெருமிதம்...!

ஜிஎஸ்டி மாற்றம் என்பது வெறும் விலை குறைப்பு அல்ல., புரட்சி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் உள்ளன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட உள்ளன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்படும். இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டியில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் விலை குறைப்பு அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அது ஒரு புரட்சி என்றும் கூறினார்.

பிரதமர் மோடியின் தீபாவளி பரிசான ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மூலம் 375 பொருட்களின் விலை குறையும் என்றும் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வந்திருப்பது என்பது வெறும் விலை குறைப்பு அல்ல புரட்சி எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊறுகாய் மாமினு கூப்ட்டாலும் பரவாயில்ல! GST விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரை

இதையும் படிங்க: இட்லி, தோசை பிரியர்களுக்கு ஷாக்.. 5% ஜிஎஸ்டி தொடருமாம்.. CBIC விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share