×
 

தேசிய விருதை தட்டிச்சென்ற இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்… ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவிப்பு…!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தேசிய விருதை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.

ஜி.வி. பிரகாஷ் குமார், தமிழ் திரையுலகில் ஒரு பன்முகக் கலைஞராக விளங்குபவர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். இவரது இசைப் பயணம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, ஜி.வி. பிரகாஷ் குமார் ‘வாத்தி’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார்.

இது அவருக்கு இரண்டாவது தேசிய விருதாகும், இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக இதே விருதைப் பெற்றிருந்தார். இந்த சாதனை, அவரது இசைத் திறமையையும், தமிழ் சினிமாவில் அவரது தாக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

இதனிடையே, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 71 வது திரைப்பட தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தேசிய விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றார். இதைப்போல், சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருதை லிட்டில் விங்ஸ் படத்திற்கு குடியரசு தலைவர் வழங்கினார். நடிகர் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்த பார்க்கிங் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்…

பார்க்கிங் படத்திற்கான தேசிய விருதை தயாரிப்பாளர் கே.எஸ். சினிஸ் பெற்றுக் கொண்டார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி வழங்கினார். நடிகை ஊர்வசிக்கு சிறந்த குணசித்திர நடிகை விருது வழங்கப்பட்டது. இதேபோல், தேசிய விருது வென்ற நடிகர்கள் உள்ளிட்டோருக்கும் குடியரசு தலைவர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க: ஒரு ஏழை தாயின் மகன்! பிரதமருக்கு இசை வடிவில் SURPRISE... ஜி.வி. பிரகாஷ் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share