×
 

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு... முழு விவரம்..!

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி உடற்கல்வி தேர்வு, டிசம்பர் 22ஆம் தேதி அறிவியல் தேர்வு, டிசம்பர் 23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணை படி., டிசம்பர் 15ஆம் தேதி தமிழ் மொழி தேர்வு, டிசம்பர் 16ஆம் தேதி ஆங்கில தேர்வு, டிசம்பர் 17ஆம் தேதி விருப்பமொழி தேர்வு, டிசம்பர் 18ஆம் தேதி கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது. டிசம்பர் 19 உடற்கல்வி தேர்வு, டிசம்பர் 22 அறிவியல் தேர்வு, டிசம்பர் 23 சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைப்படி, டிசம்பர் 10 தமிழ் மொழி தேர்வு, டிசம்பர் 12 ஆங்கிலம், டிசம்பர் 15 கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன. மேலும் டிசம்பர் 18 அறிவியல் தேர்வு, டிசம்பர் 22 சமூக அறிவியல் தேர்வு, டிசம்பர் 23 விருப்பமொழி தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: 2026-ல் விஜய் தான் முதலமைச்சர்..! செதற விடுவோம்… ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்…!

பதினோராம் வகுப்பு தேர்வு அட்டவணைப்படி, டிசம்பர் 10 தமிழ், டிசம்பர் 12 ஆங்கிலம், டிசம்பர் 15 இயற்பியல், பொருளாதாரம், டிசம்பர் 17 கணிதம், விலங்கியல், வர்த்தகம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19 வேதியியல், கணக்கியல், புவியியல், டிசம்பர் 22 கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, டிசம்பர் 23 உயிரியல், வரலாறு, தாவரவியல் தேர்வுகள் நடைபெற உள்ளது

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அட்டவணைப்படி, டிசம்பர் 10 தமிழ் மொழி தேர்வு, டிசம்பர் 12 ஆங்கிலம், டிசம்பர் 15 கணிதம், விலங்கியல், வணிகம், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல், டிசம்பர் 17 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், டிசம்பர் 19 இயற்பியல், பொருளாதாரம், டிசம்பர் 22 உயிரியல், தாவரவியல், வரலாறு, டிசம்பர் 23 கணினி அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: ராகுல் - விஜய் கூட்டணி… முக்கிய தகவல் கொடுத்த தவெக நிர்மல்குமார்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share