மாணவர்களே உங்களுக்கு தான்! காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!
1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இந்தத் தேர்வுகளுக்கான அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு உதவுவதற்காக, பள்ளிக் கல்வித்துறை ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது தேர்வுக்கு முன்னதாகவோ உத்தேச அட்டவணையை வெளியிடுகிறது.
2025- 26 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு கால அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறையின் நாள்காட்டி வெளியிட்டார். அதில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 26 ஆம் தேதி தேர்வுகள் முடிந்து, செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடையும் என்றும் டிசம்பர் 24ஆம் தேதியிலிருந்து அரையாண்டு விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொஞ்சமாச்சு அக்கறை இருக்கா? கல்வித்துறை சீரழிக்கிறீங்க! வார்னிங் கொடுத்த நயினார்...
இதனிடையே கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தொடர்ந்து சரியும் மக்கள் தொகை.. வருத்தத்தில் சீனா எடுத்த அதிரடி முடிவு..!!