×
 

அதிமுகவை யாரிடமாவது கொடுத்துவிடுங்கள் !எடப்பாடி பழனிசாமியை சாடிய அமைச்சர் நிர்மல்குமார்!

அதிமுகவை ஜெயலலிதாவிடம் ஜானகி கொடுத்தது போல், எடப்பாடி பழனிசாமியும் யாரிடமாவது கொடுத்துவிட வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் சாடியுள்ளார். 

அதிமுகவை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஜானகி ராமச்சந்திரன் ஒப்படைத்ததைப் போல, எடப்பாடி பழனிசாமியும் அக்கட்சியை யாரிடமாவது கொடுத்துவிட வேண்டும் என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர் தொடங்கிய பேரியக்கத்தை மூட்டை கட்டிவிட்டுப் பழனிசாமி சேலத்தில் அமர்ந்துவிட்டதாக அவர் சாடியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அதிமுகவின் தற்போதைய அரசியல் சரிவுக்கு எடப்பாடி பழனிசாமியின் சுயநலமே காரணம் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியும், அவரது மகனும் தங்களது சொந்தச் சுயநலத்துக்காகக் கட்சியைப் பயன்படுத்தத் தொடங்கிய போதே அதிமுக அழிந்துவிட்டது. தனது தவறான அரசியல் நகர்வுகளாலும், தன்னிச்சையான முடிவுகளாலும்தான் அதிமுக நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைப் பழனிசாமி முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவை இனியும் தன் வசம் வைத்திருக்காமல், தகுதியானவர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஒப்படைக்க வேண்டும் என்பதே தற்போதைய அரசியல் யதார்த்தம் என்று தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிமுகவின் வீழ்ச்சியைக் விமர்சித்து வரும் நிலையில், தவெக அமைச்சரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதையும் படிங்க: கரிசல் மண்ணின் குரல் ஒடுங்கியது! மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share