பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!
கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை செய்யப்பட்ட இடத்தில் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 3 இளைஞர்கள் அவரை தாக்கி, மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அடித்து விரட்டப்பட்ட நிலையில், ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பீளமேடு போலீசார் மாணவியை மீட்டனர்.
மாணவியை கூட்டுப்பாலில் கொடுமை செய்து தப்பி ஓடிய மூவரை பீளமேடு காவல்துறை இடத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நடுநடுங்க வைக்கும் கொடூரம்... பெண்கள் தலைக் காட்ட முடியல.. கொதித்தெழுந்த தமிழிசை...!
சம்பவம் நடந்த இடத்தில் காரில் இருந்து துப்பட்டா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் தடையவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்முறைக்கு உள்ளான கல்லூரி மாணவி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளம்பெண் வன்கொடுமை விவகாரம்... பாய்ந்தது குண்டாஸ்... தி.மலை போலீஸ் அதிரடி நடவடிக்கை...!