13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..! ஓராண்டாக பாலியல் வன்கொடுமை..! 14 பேரிடம் தீவிர விசாரணை..!!
ஒரு வருடமாக 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட இது போன்ற சம்பவங்கள் நீடிக்கின்றன. இந்த நிலையில், ஓராண்டாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேத்திக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டிய பாட்டி..! பரபரப்பு..!!
சேலத்தில் 13 வயது சிறுமிக்கு ஓராண்டாக பாலியல் வன்கொடுமை என புகார் எழுந்துள்ளது. சிறுமிக்கு மது கொடுக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது. பெற்றோர் அளித்த புகாரில் 3 பேரை கைது செய்த போலீஸார், மேலும் 14 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!