இனி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்ல அனுமதி... தேர்தல் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு...!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் கட்டாயமாகும்.
வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் கட்டாயமாகும். ஆதாரம் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் ரூ.50,000-க்கும் அதிகமான தொகை, தேர்தல் பறக்கும் படையினரால் (Flying Squad) பறிமுதல் செய்யப்படும். வங்கிக் கணக்கு அறிக்கை, பணி தொடர்பான ஆவணம் போன்றவை இருந்தால் மட்டுமே தொகையைத் திரும்பப் பெறலாம்.
சமீபத்தில் ஈரோட்டைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்மணி ஒருவர் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்ற 2 லட்சம் ருபாயை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ததால் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் இணையத்தில் தாறுமாறு வைரலானது. அதேபோல் வியாபாரத்திற்காக 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லும் வணிகள்களும் தங்களது பணத்தை பறக்கும் படையினரிடம் பறிகொடுக்கும் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அரங்கேறி வருகிறது.
இதையும் படிங்க: பொதுமக்களை DISTURB பண்ணாதீங்க... பறக்கும் படையினருக்கு அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல்..!!
வியாபாரிகள் ஒரு லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டுமென வணிகர்கள் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழகமே எதிர்பார்த்து வந்த இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026 - ஐ வெளியிட்ட அவர், வணிகர்கள் மற்றும் பொது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் அது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். மருத்துவ காரணத்திற்காக பொது மக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை whats app உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம் என அறிவித்தார்.
இதையும் படிங்க: இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!