ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!
தமிழகத்தின் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் கொளுத்துகிறது. வெயிலின் தாக்கத்தால் தெருக்களில் நடமாட்டம் குறைந்து, மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்கும் சூழல் நிலவுகிறது. இளநீர், பழச்சாறு, குளிர்பானங்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.
வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர்.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று தமிழகத்தில் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் 106.7 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 41.5 டிகிரி செல்சியஸ்) வெயில் கொளுத்தியது. இந்த அளவு வெப்பம் மக்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்னும் கத்திரியே தொடங்கல.. அதுக்குள்ளயா..!! 11 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்..!!
வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய பிற இடங்கள் வருமாறு:
- கோவை - 101.48 டிகிரி,
- தர்மபுரி - 102.2 டிகிரி,
- ஈரோடு - 103.64 டிகிரி,
- மதுரை நகரம் - 101.12 டிகிரி,
- மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி,
- நாமக்கல் - 101.66 டிகிரி,
- பாளையங்கோட்டை - 100.4 டிகிரி,
- சேலம் - 100.4 டிகிரி,
- திருப்பத்தூர் - 102.38 டிகிரி,
- திருச்சி - 102.02 டிகிரி,
- வேலூர் - 104.18 டிகிரி.
இந்த வெப்ப அலையால் உடல்நலப் பிரச்னைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், வெளிப்பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். போதிய அளவு தண்ணீர் அருந்துதல், லேசான உடைகள் அணிதல், தலைக்கு தொப்பி அல்லது குடை பயன்படுத்துதல் போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வெப்பத்தால் உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என எச்சரித்துள்ளது. உள்பகுதிகளில் வெப்ப அலை தொடரும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சில மலைப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெப்பத்தைத் தாங்கும் வகையில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும். இந்த கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அரசு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள், அலுவலகங்கள் வெப்ப நேரங்களில் சில மாற்றங்களை செய்யலாம். மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, இந்த வெப்ப அலையை சமாளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: இன்னும் கத்திரியே தொடங்கல.. அதுக்குள்ளயா..!! 11 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்..!!