14 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! குடை எடுத்துட்டு போங்க! வெதர் அப்டேட்!
நாளை (8-ந் தேதி) தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஜூன் 10-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று தென்காசி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாளை ஜூன் 8-ஆம் தேதி தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரபிக்கடலின் மேல் உருவான வளிமண்டல சுழற்சி! 16 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! வானிலை அலர்ட்!
ஜூன் 9-ஆம் தேதி தென்காசி, நெல்லை, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஜூன் 10-ஆம் தேதி நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரியின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை நிலவரத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக குறையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 10 வரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 22 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!! பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!! வானிலை அலர்ட்!