×
 
☰

14 மாவட்டங்களுக்கு குறி... இன்று தரமான சம்பவம் செய்யப் போகும் மழை...!

நேற்று சென்னையில் பெய்த கனமழையால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும், எந்த நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது என பார்க்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மாற்றங்கள் மழைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் கடலோரம், டெல்டா, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெளுக்க போகுது..! சென்னைக்கு கனமழை எச்சரிக்கை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. அடையாறு, மந்தைவெளி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களான அடி அண்ணாமலை, வேங்கிக்கால், கோசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, கே.கே. நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், மதுரை மீனாட்சி கல்லூரி தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

ராமேஸ்வரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால், ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீர் வெளியேற வழியில்லாததால், கோயிலில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியது. இதனால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல இடங்களில் ஆயுத பூஜை விற்பனை பாதிக்கப்பட்டது.

இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூமாப்பட்டி, மகாராஜபுரம், கான்சாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலச் சுழற்சியும், வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வரும் 22ஆம் தேதி ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: இன்று 6 மாவட்டங்களுக்கு வச்சாச்சு குறி... அறிவிக்கப்பட்டது ‘ஆரஞ்சு அலர்ட்’... எங்கெல்லாம் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share