மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கிச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கிச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நாசம்! தவெக அரசை விளாசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி!
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு அல்லது 24ஆம் தேதி அதிகாலை, விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்றும், வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக தஞ்சாவூரில் 37.0 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக தர்மபுரியில் 22.5 டிகிரி செல்சியஸும், கொடைக்கானலில் 13.0 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: வெளுக்கப்போகுது மழை...! 23 மாவட்டங்களில் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!!