×
 

7 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!! இன்னும் 2 நாளுக்கு கொட்டக் காத்திருக்கு மழை! வெதர் அப்டேட்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்பட 7 மாவட்டங்களில் இன்று (ஜன. 24) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 24) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஜனவரி 24 முதல் 29 வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 48 மணி நேரம் தான்! End card போட்டது வடகிழக்கு பருவமழை!! இன்று எங்கெல்லாம் மழை!

மேலும், மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடல் சீற்றத்துடன் இருப்பதால், படகுகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, தண்ணீர் தேங்குதல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. மழை நீர் தேங்கும் இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். மின்சாரம் தொடர்பான ஆபத்துகளை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

வானிலை மாற்றங்கள் காரணமாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அனைவரும் வானிலை மையத்தின் அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து, பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: குடை எடுத்துட்டு போங்க! சென்னை உட்பட 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை!! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share