×
 

நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மன்னார் வளைகுடாவிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, வரும் நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக ஜூலை 31 முதல் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகப் புதுக்கோட்டையில் 31.0 மில்லிமீட்டர் (3 செ.மீ) மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 41.1° செல்சியஸ் பதிவாகியுள்ளதுடன், சமவெளிப் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோவை விமான நிலையத்தில் 22.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று (ஜூலை 27) வடகடலோர தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து வரும் நாட்களில் மழை படிப்படியாக அதிகரித்து, ஜூலை 30-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திலும்; ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: குஜராத்தில் பேரிடர்: கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாவட்டங்கள்..!! தவிக்கும் மக்கள்..!!

கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளிக் காற்று எச்சரிக்கையாக, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிடப்பட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 2 நாட்களுக்கு 60 கி.மீ வேகக் காற்றுடன் கனமழை எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share