#BREAKING: குற்றவாளி ஹேமராஜுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை! கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிரடி உத்தரவு..!
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய விவகாரத்தில் குற்றவாளி ஹேமராஜுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வேலூர் அருகே கே.வி.குப்பம் பகுதியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹேமராஜ் என்பவருக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் தையல் கலைஞராகப் பணிபுரிந்து வந்தார். இவர், இரண்டாவது முறையாக 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்காக 2025 பிப்ரவரி 6 அன்று கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்தார்.
ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தபோது, மகளிர் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் இறங்கிவிட்டனர். இதனால், அந்தப் பெண் தனியாக இருந்தார். அப்போது, கே.வி.குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் மகளிர் பெட்டியில் ஏறி உள்ளார். இது பெண்கள் பெட்டி என்பதை அந்தப் பெண் சுட்டிக்காட்டியபோது, ஹேமராஜ் அவசரமாக ஏறிவிட்டதாகவும், அடுத்த நிலையத்தில் இறங்கிவிடுவதாகவும் கூறினார். ஆனால், அவர் பெட்டியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து, பின்னர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார். அப்போது அந்தப் பெண் கத்தியதால் ஆத்திரமடைந்து ஹேமராஜ், கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.
ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்ணுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், இந்த தாக்குதலின் விளைவாக அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத் துடிப்பு நின்று, கரு கலைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஹேமராஜை கைது செய்தனர். இந்த நிலையில் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை சார்பில் 50 லட்சமும் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிரடி ஆக்ஷனில் இறங்கும் தேர்தல் ஆணையம்.. பீகார் மட்டுமல்ல, தமிழகத்திலும் எதிரொலிக்கும் வேட்டு!
இதையும் படிங்க: இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! காங்., எம்.பிகளுக்கு சோனியா காந்தி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..