#BREAKING விடிந்ததுமே ஹேப்பி நியூஸ்... பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்... டெண்டரை தட்டித்தூக்கிய ‘ஹீரோ சைக்கிள்ஸ்’...!
பள்ளி மாணாக்கர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் தமிழ்நாடு அரசின் டெண்டரை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல், அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு வழங்கப்படவுள்ள சைக்கிள்களில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக வழங்கப்படும் சைக்கிள்களைக் காட்டிலும் மேம்பட்ட மாடலில், ஹெல்மெட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சைக்கிள்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்த நிலையில், குறைந்த விலைப்புள்ளியைச் சமர்ப்பித்த நிறுவனமாக (L1) ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மோடி வழியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காப்பதா? மு.வீரபாண்டியன் ஆவேசம்!
வரிகள் உட்பட ஒரு சைக்கிளுக்கான ஒப்பந்தப்புள்ளி விலை மாணவர்களுக்கு ரூ.7,235 எனவும், மாணவிகளுக்கு ரூ.7,476 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5,32,388 சைக்கிள்களை வழங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.
குறைந்த விலைப்புள்ளியைச் சமர்ப்பித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள விலையில் சைக்கிள்களைக் கொள்முதல் செய்தால், தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.392 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ஏற்கெனவே ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாகத் தேவைப்படும் ரூ.115 கோடியை, பணியாணை வழங்கப்பட்ட பிறகு ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சைக்கிள்களில் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான ஸ்டாண்ட் ஆகிய வசதிகளும் இடம்பெறவுள்ளன என்பது கூடுதல் தகவலாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சைக்கிள்கள் எளிமையான மாடலில் இருந்த நிலையில், தற்போது நவீன வடிவமைப்புடன் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியைக் கொண்ட சைக்கிள்களை வழங்கத் தமிழக வெற்றிக் கழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தற்போது நிறுவனம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீலாங்கரை டூ R.A புரம்..!! வீட்டை மாற்றுகிறாரா CM விஜய்..?? என்ன காரணம் தெரியுமா..??