H1B விசாவிற்கு போட்டியாக K விசா... சீனாவின் புதிய TRICKS...!
H1B விசாவுக்கு போட்டியாக K விசாவை அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டு உள்ளது.
H1B விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிய அனுமதிக்கும் ஒரு புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும். இது முக்கியமாக தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், கல்வி மற்றும் பிற சிறப்புத் திறன் தேவைப்படும் தொழில்களில் பணியாற்றுவதற்காக வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடியும், குறிப்பாக அமெரிக்காவில் உள்ளூர் திறமைகள் கிடைக்காத சூழலில் H1B விசா அமெரிக்க குடிவரவு மற்றும் குடியுரிமை சேவை (USCIS) மூலம் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இதற்கு குறிப்பிட்ட விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன.
செப்டம்பர் 19 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட ஒரு அரசாணை மூலம், H1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 (சுமார் 84 லட்சம் ரூபாய்) என்ற புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முடிவு, அமெரிக்காவின் சட்டபூர்வ இம்மிக்ரேஷனைக் கட்டுப்படுத்தும் புதிய அணுகுமுறையின் ஒரு பகுதி. தற்போதைய H1B விசா உடையவர்கள், அவர்களின் புதுப்பிப்புகள் அல்லது அமெரிக்காவுக்கு திரும்பும் போது இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
H1B விசாவுக்கு போட்டியாக K விசாவை அறிமுகப்படுத்த சீனா முயற்சி மேற்கொண்டு உள்ளது. அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று இந்த சீனாவின் புதிய முயற்சி தெற்காசிய திறமைமிகு ஊழியர்களை இழுக்க களம் இறங்குகிறது.
இதையும் படிங்க: H1B விசா விவகாரம்.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்.. இந்திய தூதரகம் அதிரடி..!!
H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படும், உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கத்தில் இந்த புதிய விசா அறிமுகம் ஆகியுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் K விசா அமலுக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர்.. அதிமுக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்ப்பு..!