×
 

#BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.

டெட் தேர்வு என்பது இந்தியாவில் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான ஒரு முக்கியமான தேர்வாகும். இது மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறன் மற்றும் ஆசிரியப் பணிக்கான அடிப்படை தகுதியை சோதிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் இந்தத் தேர்வைத் தொடங்கியது.

இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அளவில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இது என்று அழைக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது பிரிவினருக்கான குறைந்தபட்சம் மதிப்பெண்களை 60 சதவீதத்தில் இருந்து 50% குறைக்க கூறிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

அரசின் கொள்கை முடிவுகளை ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அதுவரை தேர்வு முடிவுகளை விடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2010 இல் நியமிக்கப்பட்ட பொது பிரிவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

எஸ் சி/எஸ் டி, சீர்மரபினர், பட்டியல் இனத்தவர் பழங்குடியினருக்கு மார்க் 5% குறைக்கப்பட்டது போல் புது பிரிவினருக்கும் குறைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவுகளை வெளியிடும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: "கல்வி கட்டணம்"..! தனியார் பள்ளிகளுக்கு ஷாக்..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share