லைசன்ஸ் ரத்து.. ஆட்டோ பறிமுதல்.. அடுத்தடுத்து செக் வைத்தது மதுரை கோர்ட்..!
ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தொடர்பான வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது. அப்போது, அதிகமான நபர்களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மோட்டார் வாகன விதிகளில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, போக்குவரத்து துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.