×
 

தர்கா அருகே அட்ராசிட்டி... இந்து முன்னணியினர் போலீசார் இடையே கைகலப்பு... முக்கிய நிர்வாகிகள் படுகாயம்...!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்  போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் காயம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இரவு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின் போது போலீசார் உடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  இந்து முன்னணி சார்பில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. மாலை மதுரை சாலையில் உள்ள ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு 26 விநாயகர் சிலைகளும் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் ஊர்வலம் வந்த போது, அப்பகுதியில் பள்ளி வாசல் இருப்பதால் கொட்டு அடிக்கக்கூடாது என போலீஸார் தெரிவித்தனர். 

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு இந்து முன்னணி, போலீஸார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் வினோத் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: அரசு பள்ளி to அமெரிக்கா... தமிழகத்தை தலைநிமிர வைத்த 11ம் வகுப்பு மாணவி...!

விநாயகர் சிலைகள் அனைத்து திருவண்ணாமலை கோனேரிகுளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. முன்னதாக போலீசார் மற்றும் இந்து முன்னணிக்கு இடையேயான தள்ளுமுள்ளுவில் கலைமடைந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதையும் படிங்க: கடனில் மூழ்கப்போகும் அமெரிக்கா... அப்பாவி மக்களின் அடிமடியில் கைவைக்க திட்டமிடும் டிரம்ப்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share