×
 

லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை ஆணையர் கைது! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை...

கோவையில் ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இந்திரா கையும் களவுமாக பிடிபட்டார்.

லஞ்சம் என்பது ஒரு நபர் தனது அதிகாரத்தை அல்லது பதவியை தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக பணம், பொருள் அல்லது பிற நன்மைகளைப் பெறுவதைக் குறிக்கிறது. இது சமூகத்தின் அனைத்து தளங்களிலும் நீதி, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தீவிரமான குற்றம். லஞ்சம் பெறுவது நிறுவனங்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான மக்களின் நம்பிக்கை குறைகிறது.

லஞ்சம் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது, முதலீடுகளைக் குறைக்கிறது, மற்றும் வரி வருவாயைப் பாதிக்கிறது. தகுதியற்றவர்கள் ஆதரவு பெறுவதால், தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். லஞ்சம் ஏழைகளை மேலும் பாதிக்கிறது, ஏனெனில் அவர்களால் லஞ்சம் கொடுக்க முடியாது. லஞ்சம் ஒரு பொதுவான நடைமுறையாக மாறி, சமூகத்தில் ஊழலைப் பரவலாக்குகிறது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள வீரமாத்தி அம்மன் கோவில் விவகாரம் தொடரமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பு நீதிமன்றத்தை அணுகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோயிலாக கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதை எடுத்து வீரமாத்தி அம்மன் கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதனை எடுத்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டுமானால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இந்திரா என்பவர் வற்புறுத்தியதாக தெரிகிறது. அவர், நஞ்சப்பன் மகள் கிரேஸ் என்பவரிடமிருந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் வாங்கியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மூன்று லட்ச ரூபாய் பேரம் பேசி ரூ. 1.5 லட்சம் வாங்கிய போது பிடிபட்டார். அவர் லஞ்சப் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனை அடுத்து ஆணையர் அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share